Home இலங்கையாழ்.குடாநாட்டில் டெங்கு நோய் தொற்று அதிகரிப்பு

யாழ்.குடாநாட்டில் டெங்கு நோய் தொற்று அதிகரிப்பு

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்.குடாநாட்டில் டெங்கு நோய் தொற்று அதிகரித்து காணப்படுவதாக யாழ்.மாவட்ட சுகாதார திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,

யாழில்.இந்த மாதம் 13 ஆம் திகதி வரையிலான 13 நாட்களில் 311 பேர் டெங்கு நோய் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக இனம் காணப்பட்டு உள்ளனர். கடந்த நவம்பர் மாதம் 480 பேர் டெங்கு நோய் தொற்றுக்கு உள்ளாகி இருந்தனர் என இனம் காணப்பட்டனர்.

டெங்கு நோயை கட்டுப்படுத்தும் செயற்திட்டங்கள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விசேடமாக யாழ்ப்பாணம் , சாவகச்சேரி , நல்லூர் , கோப்பாய் , உடுவில், சங்கானை , கரவெட்டி சண்டிலிப்பாய் , பருத்தித்துறை மற்றும் தெல்லிப்பளை ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட பகுதிகளில் செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு உள்ளன.

அதனால் தற்போது ஓரளவுக்கு டெங்கு நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. என மேலும் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More