Home உலகம்பயிற்றுவிப்பாளருக்கு எதிரான குற்றச்சாட்டு அதிர்ச்சியளிக்கின்றது – ஜஸ்டின் காட்லின்

பயிற்றுவிப்பாளருக்கு எதிரான குற்றச்சாட்டு அதிர்ச்சியளிக்கின்றது – ஜஸ்டின் காட்லின்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பயிற்றுவிப்பாளருக்கு எதிரான குற்றச்சாட்டு அதிர்ச்சியளிப்பதாக உலக சம்பியன் குறுந்தூர ஓட்ட வீரர் ஜஸ்டின் காட்லின் (Justin Gatlin)தெரிவித்துள்ளார். தமது பயிற்றுவிப்பாளர் டெனிஸ் மிச்சல் மற்றும் முகவர் ரொபர்ட் வெக்னர் ஆகியோருக்கு எதிராக இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது எனவும் இந்தக் குற்றச்சாட்டுக்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் காட்லின் தெரிவித்துள்ளார்.

காட்லின் ஊக்க மருந்து பயன்படுத்தியதாக அவரது முகவர் வெக்னர் கூறுவதாக பிரித்தானிய ஊடகமொன்று தெரிவித்துள்ளது. காட்லின் இந்த ஆண்டு நடைபெற்ற உலக சம்பியன்ஸிப் மெய்வல்லுனர் போட்டித் தொடரில் நட்சத்திர வீரர் ஹூசெய்ன் போல்டை வீழ்த்தி வெற்றியீட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, தாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஊக்க மருந்து வகைகளை பயன்படுத்தியது கிடையாது என காட்லின் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More