குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட புளொட்டின் முன்னாள் உறுப்பினருக்கும் ஆவா வன்முறைக் குழுவுக்கும் தொடர்பு உள்ளதா? என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று யாழ்ப்பாணம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் சந்தேகநபரை காவல்துறையினர் இன்று முற்படுத்தினர். இதன்போதே நீதிமன்றிடம் இந்த விடயத்தைத் தெரிவித்தனர்.
‘சந்தேகநபரிடம் துப்பாக்கிகள், அவற்றுக்கான ரவைகள் மற்றும் வாள்கள் மீட்கப்பட்டன. யாழ்ப்பாணத்தில் வன்முறைகளில் ஈடுபடும் ஆவாக் குழுவிடமும் இவ்வாறான வாள்களே உள்ளன. இந்த வழக்கின் சந்தேகநபருக்கும் ஆவா குழுவுக்கும் தொடர்பு உள்ளதா? என விசாரணைகளை முன்னெடுத்துள்ளோம்’ என்று நீதிமன்றில் காவல்துறையினர் தெரிவித்தனர்.