குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
போலந்துக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. போலந்தில் முன்னெடுக்கப்பட உள்ள நீதித்துறைசார் மறுசீரமைப்புக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பாக இந்த திருத்தங்கள் நாட்டின் சட்டம் ஒழுங்கை பாதிக்கக் கூடிய வகையிலானது என தெரிவித்துள்ளது.
ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டால் போலந்திற்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் வாக்கெடுப்புக்களில் பங்கேற்க முடியாத நிலைமை ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, ஊழல் மோசடிகளை தடுக்கவே இந்த மாற்றங்கள் செய்யப்படுவதாகவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானம் அரசியல் ரீதியானது எனவும் போலந்தின் கன்சர்வேட்டிவ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.