குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சிரியாவில் நடத்தப்பட்ட வான் தாக்குதல்களில் 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சிரிய கிளர்ச்சியாளர்களின் முக்கிய நிலைகளில் ஒன்றான இட்லிப் பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளன. இந்த தாக்குதல் சம்பவத்தில் மேலும் 25 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக பிரித்தானியாவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் சிரிய மனித உரிமை கண்காணிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் ஏழு சிறுவர் சிறுமியரும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கிளர்ச்சியாளர்களின் வசமுள்ள கிராமத்தின் மீது சிரிய அரசாங்கப் படையினர் அல்லது ரஸ்ய படையினர் வான் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. எனினும், இந்த தாக்குதலை நடத்தவில்லை என ரஸ்ய விமானப்படையினர் மறுத்துள்ளனர். சிரிய அரசாங்கப் படையினர் இது குறித்து எவ்வித தகவல்களையும் இதுவரையில் வெளியிடவில்லை.