134
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
சொந்த பாவனைக்கு கஞ்சா வைத்திருந்ததாக கூறிய இளைஞர் ஒருவரை யாழ்ப்பாண காவற்துறையினர் கைது செய்துள்ளனர். கொக்குவில் புகையிரத நிலைய பகுதியை சேர்ந்த 23 வயதுடைய இளைஞரே நேற்றிரவு கைது செய்யப்பட்டார்.
இளைஞர் ஒருவர் கஞ்சா போதை பொருளுடன் புகையிரத நிலைய பகுதியில் நிற்பதாக பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த போலீசார் சந்தேகத்திற்கு இடமாக நடமாடிய குறித்த இளைஞரை சோதனையிட்டனர். அதன் போது இளைஞரின் உடமையில் இருந்து 04 கிராம் கஞ்சா போதை பொருளினை யாழ்ப்பாண காவற்துறையினர் மீட்டனர். அதன் போது இளைஞர் அதனை தான் பாவிப்பதர்காகவே வைத்திருந்தேன். அதனை விற்பனை செய்யும் நோக்கில்லை என காவற்துறையினரிடம் கூறியுள்ளார். குறித்த இளைஞரை கைது செய்த யாழ்ப்பாண காவற்துறையினர், காவற்துறை நிலையத்திற்கு அழைத்து சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love