குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
எந்தவொரு நாட்டுக்கு எதிராகவும் ஐக்கிய நாடுகள் அமைப்பில் வாக்களிக்கவில்லை என இலங்கை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பில் நேற்றைய தினம், இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேம் அறிவிக்கப்பட்டமைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக இலங்கை அரசாங்கம் நேற்றைய தினம் வாக்களித்திருந்தது.
அமெரிக்கா ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக பிரகடனம் செய்திருந்தது. இந்த நிலையில் உலகின் பல நாடுகளும் அமெரிக்காவின் தீர்மானத்தினை எதிர்த்துடன், ஐக்கிய நாடுகள் அமைப்பில் தீர்மானம் ஒன்றையும் நேற்று நிறைவேற்றியிருந்தன.
இலங்கையின் நீண்ட கால மரபு கொள்கைகள் ஆகியனவற்றை பின்பற்றியே தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்கப்பட்டது என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஜெருசலேம் இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனம் ஆகியனவற்றின் தலைநகராக பகிர்ந்து கொள்ளப்பட வேண்டியது எனக் குறிப்பிட்டுள்ளது. பரஸ்பர புரிந்துணர்வுடன் செயற்படுவதன் மூலம் இரு தரப்பினருக்கு நன்மை அடைந்து கொள்ள முடியும் என தெரிவித்துள்ளது.