இலங்கை பிரதான செய்திகள்

ஜனநாயக போராளிகள் கட்சி தமிழரசு கட்சியில் சங்கமித்தது…

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

ஜனநாயக போராளிகள் கட்சி தமிழரசு கட்சியின் ஆசன ஒதுக்கீடு ஊடாக இம்முறை உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதாக தமிழரசு கட்சியின் இணை செயலாளரும் , வடமாகாண சபை அவைத்தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். தமிழரசு கட்சியின் யாழ்.மார்ட்டீன் வீதி அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவ்வாறு தெரிவித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பில் தற்போது தமிழரசு கட்சி , ரெலோ மற்றும் புளேட் ஆகிய கட்சிகளே தற்போது பங்காளி கட்சிகளாக உள்ளன. இந்த நிலையில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் , தமிழரசு கட்சியின் ஆசன ஒதுக்கீட்டில் ஜனநாயக போராளிகள் கட்சியை சார்ந்தவர்களும் தேர்தலில் போட்டியிடுகின்றார்கள் என தெரிவித்தார்.

 

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link