குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இடம்பெயர் மக்களை உதாசீனம் செய்யக் கூடாது என பாப்பாண்டவர் முதலாம் பிரான்ஸிஸ் தெரிவித்துள்ளார். நத்தார் நல் ஆதாரனையில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சொந்த மண்ணிலிருந்து விரட்டியடிக்கப்படும் மில்லியன் கணக்கான இடம்பெயர் மக்களை உலக சமூகம் உதாசீனம் செய்துவிடக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த இடம்பெயர் மக்கள் புனித யேசு கிறிஸ்துவன் தாய் மேரி மற்றும் தந்தை ஜோசப் என்றே நாம் கருத வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். நசரேத் நகரிலிருந்து பெத்லஹேம் வரையில் ஒர் இருப்பிடமிருந்து இந்த தம்பதியினர் செல்ல வேண்டிய நிலைமை புனித திரு விவிலியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதனை அவர் தெளிவுபடுத்தியுள்ளார். தாமும் இடம்பெயர் குடும்பமொன்றை பூர்வீகமாகக் கொண்டவர் எனவும், இதனால் இடம்பெயர் அகதி மக்களின் வேதனைகளை நன்கு உணர்ந்து கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.