Home இலங்கைகிளிநொச்சியில் கடதப்பட்ட பெறுமதியான மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளன:-

கிளிநொச்சியில் கடதப்பட்ட பெறுமதியான மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளன:-

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…


கிளிநொச்சி அக்கராயன்குளம் பிரதேசத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கி பெறுமதியான பால மரக்குற்றிகளுடன் சென்ற இரண்டு வாகனங்களை கிளிநொச்சி காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

இன்று (25) காலை அம்பாள்குளம் பிரதேசத்தில் வைத்து கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி காவல்துறை மா அதிபரின் விசேட மதுஒழிப்பு பிரிவினரால் பால மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

12 பெறுமதியான பால மரக் குற்றிகள் கடத்தி வரப்பட்ட போதே கைப்பற்றப்பட்டுள்ளன. உதவி காவல்துறை பரிசோதகர் பிரதீபன், மற்றும் காவல்துறை அதிகாரிகளான திசாநாயக்க, அதிகாரி,கணேஸ்குமார், ரஞ்சீப்ராஜ், அளகேசன் ஆகியோரேயே இந் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More