222
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மொஸ்கோவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். ரஸ்யாவின் மொஸ்கோவில் அமைந்துள்ள சுரங்கப் பாதையொன்றில் இந்த பேருந்து விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 15 பேர் வரையில் காயமடைந்துள்ளனர். இந்த விபத்திற்கும் பயங்கரவாத சம்பவங்களுக்கும் இடையில் தொடர்பு இருப்பதாக தென்படவில்லை என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
பேருந்து தானாகவே இயங்கத் தொடங்கியது என பேருந்தின் சாரதி, ரஸ்ய காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். பனியுடன் கூடிய காலநிலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love