171
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
புயல் காற்று காரணமாக வியட்நாமில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் இடம்பெயரக் கூடிய அபாயத்தில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தென் சீன கடல் வழியாக வியட்நாமை பாரிய அளவிலான புயல் காற்று ஒன்று தாக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தாழ் நிலப் பகுதிகளிலிருந்து ஏற்கனவே சுமார் 7 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த புயல் காற்றின் சீற்றத்தினால் பிலிப்பைன்ஸில் சுமார் 230 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 75 ஆயிரம் பேர் இருப்பிடங்களை இழந்துள்ளனர். பிலிப்பைன்ஸில் இன்னும் 100 பேரைக் காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
Spread the love