ஏமனில் சவூதி அரேபியாவின் கூட்டுப் படையினர் மேற்கொண்ட வான்தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 25 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏமனில் ஜனாதிபதி அலி அப்துல்லா சால்வின் ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிவரும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படையும் அமெரிக்காவும் இணைந்து வான்வெளி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஏமனின் மேற்கு பகுதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நிறைந்துள்ள பகுதியின் மீது சவுதி அரேபிய கூட்டுப்படையினர் நேற்று வான்தாக்குதல் நடத்தியதாகவும் இதில் குழந்தைகள் உள்பட 25க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த 48 மணி நேரத்தில் கூட்டுப் படையினர் நடத்திய வான்தாக்குதலில் 70க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.