ஐஏஎஸ் அதிகாரிகள் அனைவரும் தங்கள் சொத்து விவரங்களை அடுத்த மாதத்துக்குள் தெரிவிக்க வேண்டும் என இந்திய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தவறுப் பட்சத்தில் பதவி உயர்வு மற்றும் வெளிநாட்டு பணிகளுக்குத் தேவையான ஊழல் கண்காணிப்புத்துறையின் ஒப்புதல் கிடைக் காது எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய நிர்வாகம் மற்றும் பயிற்சித்துறை அனைத்து மத்திய அரசுத்துறைகள், மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுக்கு உத்தரவு அனுப்பியுள்ளது.
அதில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அனைவரும் வரும் ஜனவரி 31-ம் திகதிக்குள் தங்கள் அசையா சொத்து விவரங்களை தெரிவிக்க வேண்டும் எனவும் அவர்கள் தங்கள் சொத்து விவரங்களை தெரிவிப்பதை மத்திய அரசுத் துறைகள், மாநில மற்றும் யூனியன் பிரதேசங்கள் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதிலும் இப்போது 5004 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியில் இருப்பதாக மத்திய நிர்வாகம் மற்றும் பயிற்சித்துறையின் தற்போதைய புள்ளி விவரம் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.