சினிமா பிரதான செய்திகள்

அட்லீ இயக்கப் போகும் அடுத்த நாயகன் யார் ?

தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்து வருகின்ற இயக்குநர் அட்லீ இயக்கிய முதல் படமான ராஜாராணி ஹிட் ஆனது. இதனை அடுத்து நடிகர் விஜய்யை வைத்து படங்களை இயக்கினார்.

விஜய்யை வைத்து அவர் இயக்கிய தெறி படம் ஹிட்டானதால் மீண்டும் விஜய்யோடு சேர்ந்து மெர்சல் படத்தினை இயக்கினார். இந்நிலையில் அட்லீ பாகுபலி புகழ் பிரபாஸ் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மெர்சல் படத்திற்கு கதை எழுதிய ராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் தான் அட்லீ இயக்கும் அடுத்த படத்திற்கும் கதை எழுதுவார் எனக் கூறப்படுகிறது.

தற்போது சாஹே’ படத்தில் நடித்துவரும் பிரபாஸ், அதன் படப்பிடிப்பு முடிந்தவுடன் அடுத்த வருடம் அட்லீ இயக்கும் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் எனவும் கூறப்படுகிறது. இருப்பினும் அட்லீயிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.