சிரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ரஸ்ய விமானப் படையினர் மேற்கொண்ட தாக்குதல்களில் 19 பொதுமக்கள் உள்பட 66 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரியாவின் இப்லிப் மாகாணத்தில் தீவிரவாதிகளை குறிவைத்து அந்நாட்டு அரச படையினர் மேற்கொள்ளும் தாக்குதலுக்கு ரஸ்ய போர் விமானங்களும் வான்தாக்குதல் மேற்கொண்டு துணைபுரிகின்றன.
இந்நிலையில், ஹாமா மற்றும் இப்லிப் மாகாணத்தின் தென்மேற்கு பகுதிகளில் ரஸ்ய விமானப்படைகள் கடந்த 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்களில் 19 பொதுமக்கள் உள்பட 66 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சிரியாவில் இயங்கிவரும் பிரித்தானியாவினைச் சேர்ந்த மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
சிரியாவில் இடம்பெற்றுவரும் போரில் இதுவரை சுமார் 3 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் பல லட்சம் மக்கள் உயிருக்கு அஞ்சி நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது