சூடானில் இரண்டு மாநிலங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கஸ்ஸாலா (Kasala ) மற்றும் வடக்கு குர்டுஃபான் ( North Kordofan ) ஆகிய மாநிலங்களுக்கு ஆறு மாதங்களுக்கு அவசரநிலையை பிரகடனம் செய்து அந்நாட்டு ஜனாதிபதி ஒமர் அல் பஷீர் இன்று உத்தரவிட்டுள்ளார்.
உள்நாட்டுப் போரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சூடானின் டர்பர் மாநிலத்தின் பெரும்பகுதி போராளிகளின் வசம் சிக்கியுள்ள நிலையில் அங்கு வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த ஐ.நா.சபை சார்பில் பன்னாட்டு படையினரும், அமைதிப் படையினரும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
போராளிகளை கட்டுப்படுத்தவும் அவர்களிடமுள்ள ஆயுதங்களை பறிமுதல் செய்யவும் கடந்த ஒக்டோபர் மாதம் முதால் டர்பர் மற்றும் புளூ நைல் பகுதிகளில் ராணுவத்தினர் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நடவடிக்கைகளை அருகாமையில் உள்ள கஸ்ஸாலா மற்றும் வடக்கு குர்டுஃபான் மாநிலங்களிலும் விரிவுப்படுத்தும் வகையில் இரு மாநிலங்களிலும் இன்று முதல் ஆறு மாதங்களுக்கு அவசரநிலையை பிரகடனம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.