நுவரெலியா சீத்தாஎலிய சீதை அம்மன் ஆலயத்தில் கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வே.இராதாகிருஸ்ணனின் ஏற்பாட்டில் 2018 ஆம் ஆண்டு புதுவருட வரவேற்பை முன்னிட்டு நடைபெற்ற பூஜைகளில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்கள். கலந்துக் கொண்டுள்ளார்.
ஆலயத்தை சுற்றி பார்த்த பிரதமர் எதிர்காலத்தில் எக்கல பூந்தோட்டத்தில் இருந்து ஆலயம் வழியாக நுவரெலியா செல்லும் பாதையினை அபிவிருத்தி செய்து ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் வசதி கருதி வாகன தரிப்பிடம் உட்பட ஏனைய வசதிகளை மேற்க் கொள்ள சம்பந்தபட்ட அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இந் நிகழ்வுகளில் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர் .இராஜாராம் உட்பட அரசியல் பிரமுகர்கள்¸ நகர வர்த்தகர்கள்¸ ஆலய பரிபாலன சபையின் ஆகியோர் கலந்துக் கொண்டார்கள்