196
அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலை கைதிகள் இன்று அதிகாலை தொடக்கம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சிறைச்சாலையின் சில நடவடிக்கைகளுக்கு காவல்துறை விசேடப் படையணியை ஈடுபடுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 400 கைதிகள் சிறைச்சாலை கூரை மீது ஏறி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் 1200 கைதிகளை தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love