203
வடமாகாண கல்வி,பண்பாட்டலுவல்கள் விளையாட்டு;ததுறை,இளைஞர் விவகார அமைச்சானது மாணவர்களின் சுய கற்றலை வலுப்படுத்தவும்,பிரதன பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லாத குறையை ஓரளவுக்குப் போக்கவும் அல்லது முக்கிய பாடங்களான கணிதம்,விஞ்ஞானம்,ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர்கள் பாடசாலைக்குச் சமுகம் அளிக்காத சந்தர்ப்பங்களில் தடையின்றிப் பாடங்கள் நடைபெறுவதற்கென்ற பல்வேறு உயர்ந்த நோக்கங்களைக் கருத்தில் கொண்டு ஆரம்ப வகுப்புகள் தொடக்கம் க.பொ.த. உயர்தரம் வரை கணிதம், விஞ்ஞானம்,ஆங்கலம் போன்ற முக்கியமான பாட்களுக்கு அவ்வப் பாடங்களின் அறிவுரைப்பு வழிகாட்டிக ளுக்கு அமைய மாணவர்கள் விரும்பிக் கற்கக் கூடிய வகையில் இறுவட்டுக்களாக உருவாக்கி மாணவர்க ளுக்கு விநியோகிக்கும் செயற்பாடு வடமாகாணக் கல்வ அமைச்சில் நடைபெற்று வருகின்றது.
அந்த வகையில் கடந்த ஆண்டு க.பொ.த. சாதாரண தர வகுப்புகளுக்கான கணித,விஞ்ஞான பாடங்களுக் கும்,க.பொ.த. உயர்தர வகுப்புகளுக்கான இரசாயனவியல்,உயிரியல்,பௌதிகவி யல், ஆகியவற்றுடன் ஆறாம் வகுப்புக்கான ஆங்கிலம்,கணிதம் ஆகிய பாடங்களுக்கும் இறுவெட்டுகள் தயாரிக்கப்பட்டுச் சகல பாடசாலை களுக்கும் வழங்கப்பட்டன.அந்த வேலைத் திட்டத்தின் தொடர்ச்சியாக 2018 ஆம் ஆண்டில்,க.பொ.த. உயர்தர வகுப்பிற்கான உயிரியல் பாட்ததிற்கான இரண்டாம்,மூன்றாம் தவணைக்கான பாடவிதானத்தைக் கொண்ட இறுவெட்டும், பௌதிகவியலுக்கான இரண்டாம் தவணைக்கான பாடத்திட்டத்திற்கான இறுவெட்டும்,உயிரியல் தொழில் நுட்ப பாடத்தில் 70 வீதமான செய்முறைகளும்,3 ஆம் தரத்திற்கான ஆங்கிலமும், பொதுவாக அனைத்து மாணவர்களும் இலகுவாகத் தாமாகவே ஆங்கிலம் கற்பதற்கான படிமுறைகள் கொண்ட இறுவெட்டுக்களும் வெளியிடப்பட்டுளளன.
இவ்வாறான ந-கல்வியினூடாக மாணவர்கள் சுயமாகக் கற்கக்கூடிய செயல்திட்டத்தைத் தொடர்ந்தும் செயற்படுத்துவதற்காக கல்வி அமைச்சின் கவனத்திற்குரிய முக்கிய விடயங்களான மாணவர் அடைவு மட்டங்கள்,ஆசிரியர்களின் வாண்மை விருத்தி,கல்வி அமைச்சின் பல்வேறுபட்ட நிர்வாக வினைத்திறனை அதிகரித்தல் போன்ற விடயங்கள் தொடர்பாகவும் தொடர்ச்சியாக ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கைகளை அளிப்பதற்காகவும் கல்வி அமைச்சானது,கடந்த 18.10.2018 அன்று வியாழக்கிழமை ‘ஆய்வு அபிவிருத்திப் பிரிவை’ அங்குரார்ப்பணம் செய்து வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் வடக்கு மாகாணக் கல்வி அமைச்சினால் மாணவர்களின் அடைவுவ மட்டத்தை உயர்த்துவதற்கான இத்தகைய செயற்பாடுகள்,இலங்கையில் உள்ள அனைத்துத் தமிழ் மாணவர்களுக்கும் பயன்படவேண்டும் என்ற நோக்கில்,மேற்குறிப்பிட்ட இறுவெட்டுக்களில் உள்ள அனைத்து விடயங்களையும் உள்ளடக்கியதாக வடமாகாணக் கல்வி அமைச்சினால், ‘இ-பாடசாலை’ என்ற இணையத்தளம் நேற்று திங்கட்கிழமை வடமாகாணக் கல்வி அமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
“www.epadasalai”என்ற இணையத் தளத்தின் ஊடாக இலங்கையில் வாழும்; அனைத்துத் தமிழ் மாணவர்களும்,பெற்றோர்களும்,ஆசி ரியர்களும் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். மேற்குறிப்பிட்ட இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வும்,இறுவெட்டு வெளியீடும் கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று திங்கட் கிழமை இடம் பெற்றது.
கல்வி அமைச்சின் ஆய்வுப் பிரிவுக்குப் பொறுப்பாக இருக்கும் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.கந்ததாசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்வி அமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் அவர்கள் கலந்து கொண்டு இறுவெட்டுக்களை அங்கு சமுகமளித்திருந்த பாடசாலை அதிபர்களிடம் வழங்கி வைத்தார்.அதனைத் தொடர்ந்து ஆய்வு அபிவிருத்திப் பிரிவின் செயல்திட்ட அலுவலர் சி.கைலாசபதி இறுவெட்டுக்கள் தொடர்பான விளக்கத்தைக் காட்சிப்படுத்தி விளக்கினார்.இந்நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள்,கல்விஅமைச்சின் பிரதம கணக்காளர் எஸ்.சிவரூபன், கல்வி அமைச்சின் பிரத்தியேகச் செயலாளர் ந.அனந்தராஜ்,மற்றும் அதிபர்கள்,ஆசிரியர்கள், வளவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். இவ்விறு வெட்டுக்கள் வடமாகாணத்தில் உள்ள ஏனைய பாடசாலைகளுக்கும் அனுப்பி வைக்கப்படும் என்றும் க்லவி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Spread the love