பெண்கள் தெரிவிக்கும் பாலியல் தொல்லை குறித்த முறைப்பாடுகள் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்பது தொடர்பாக தொடரப்பட்ட பொதுநல வழக்கை உடனடியாக விசாரிக்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
சினிமா துறை உள்ளிட்ட பல்வேறு துறை களைச் சேர்ந்த பெண்கள், தாங்கள் பாலியல் தொல்லைக்குள்ளானமை குறித்து ‘மீ ரூ’ இயக்கத்தின் மூலம், முறைப்பாடு தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், இந்த பிரச்சினை தொடர்பாக எம்.எல்.சர்மா என்ற சட்டத்தரரணி உயர்நீதிமன்றில் தொடர்ந்த பொதுநல வழக்கில் மீரூ இயக்கத்தின் மூலம் பெண்கள் கூறும் பாலியல் தொல்லை முறைப்பாடுகள் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்யுமாறு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
மேலும் அவ்வாறு முறைப’பாடு தெரிவிக்கும் பெண்களுக்கு தேவையான உதவிகளையும், பாதுகாப்பையும் வழங்குமாறு தேசிய பெண்கள் நல ஆணையத்துக்கு கட்டளையிட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். கூறப்பட்டு உள்ளது. இந்த மனு மீதான அமர்வு நேற்றையதினம் எடுத்துக் கொள்ளப்பட்ட போது மனுதாரர் எம்.எல்.சர்மா முன்னிலையாகி இந்த மனுவை அவசர வழக்காக கருதி உடனடியாக விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். எனினும் அவரது கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், உரிய நேரத்தில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளார்கள்.