144
பிரதமர் பதவியிலிருந்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நீக்கப்பட்டுள்ளார் என்பதை கடிதம் மூலம் அவருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். “அரசமைப்பின் பிரகாரம் எனக்குள்ள அதிகாரங்களின்படி உங்களைப் பிரதமராக நியமித்தேன். அதேபோல் பிரதமர் பதவியில் இருந்தும் தற்போது தங்களை நீக்கியுள்ளேன்” என்று அந்தக் கடிதத்தில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இதற்கான வர்த்தமானியும் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
அரசமைப்பின்படி நான்தான் பிரதமர்! நாடாளுமன்றம் அதனை முடிவு செய்யும் :
“அரசமைப்பின் பிரகாரம் நான்தான் பிரதமர். நாடாளுமன்றம் அதனை முடிவு செய்யும்” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கடிதம் அனுப்பியுள்ளார். பிரதமர் பதவியிலிருந்து ரணில் நீக்கப்பட்டுள்ளார் என்பதை கடிதம் மூலம் அவருக்கு ஜனாதிபதி மைத்திரி அறிவித்திருந்தார். இதற்குப் பதில் கடிதத்தை ஜனாதிபதிக்கு ரணில் அனுப்பியுள்ளார். அதிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

Spread the love