புதிய பிரதமராக தெரிவுசெய்யப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஸவை காவற்துறை மா அதிபருடன் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் மற்றும் காவற்துறை உயர் அதிகாரிகள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களான உதய கம்மன்பில, மஹிந்தானந்த அழுத்தகமாகே, கெஹலிய ரம்புக்வெல்ல, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ உள்ளிட்டோர் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மகிந்த ராஜபக்ச தரப்பினரை எதிர்த்து வந்த காவற்துறை அதிபரின் செயற்பாடுகளை விமர்சித்து வந்தார் மஹிந்த ராஜபக்ஸ. நாட்டின் பாதுகாப்பு செயற்பாடுகளில் அவர் ஸ்திரதன்மையற்றிருப்பதாகவும் கூறினார்.
இந்த நிலையில் புதிய பிரதமர் மகிந்த ராஜபக்ஸ மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸவுக்கு காவல்துறை வணக்கத்தை தெரிவித்த காவற்துறை மா அதிபருடன் நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் அவருடன் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, நாட்டின் ஜனநாயகத்திற்கும், சட்டத்திற்கும் மதிப்பளித்து செயற்படுமாறு மஹிந்த ராஜபக்ஸ ஐக்கிய தேசிய கட்சியினரிடம் கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.