136
“புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுக்கே ஆதரவு வழங்குவோம்” என இலங்கை தொழிலாளர் காங்ரஸின் பிரதி தலைவர் முத்து சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், தேசிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த காலம் முதல் நிலை இல்லாமலே இருந்தது. எனினும் தற்போது பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஸவின் அரசாங்கத்துக்கு கீழ் எமது மக்களின் பிரச்சினைகளை தீர்த்துகொள்ள முடியும். குறிப்பாக தற்போது தோட்டத் தொழிலாளர்களின் முக்கிய பிரச்சினையாக உள்ள சம்பள பிரச்சினைக்கு மஹிந்த தீர்வுகாண்பார் எனத் தெரிவித்துள்ளார்.
Spread the love