228
வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதிக் காவல் துறை மா அதிபர் நாலக டி சில்வாவுக்கு விசேட பாதுகாப்பு வழங்குமாறு சிறைச்சாலைகள் அமைச்சு அறிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ ஆகியோரின் கொலை திட்டம் சம்பந்தமாக வெளியிடப்பட்ட ஒலிப்பதிவு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள நாலக டி சில்வா நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love