இணையம் மூலம் மருந்துப் பொருட்களை விற்பனை செய்ய இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இணையம் மூலம் மருந்துப் பொருட்களை விற்பனை செய்யப்படவதனை தடைசெய்யக்கோரி தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இணையம் மூலமாக மருந்து பொருட்களை விற்பனை செய்வதன் மூலமாக காலாவதியான மருந்துகளை பொதுமக்களுக்கு விநியோகிக்கவும், போலி மருந்து மாத்திரைகளை விற்பனை செய்யவும் வாய்ப்பாக அமைந்து விடுவதாகவும் மருத்துவர் பரிந்துரை செய்யாத மருந்துப் பொருட்களை விற்பனை செய்யும் சட்டவிரோத நடவடிக்கை இடம்பெறுவதாகவும் மனுவில் சுட்டிக்காட்டியிருந்தனர்.
மேலும் எந்தவொரு அங்கீகாரமும் இன்றி இணையம்; மூலமாக மருந்துப் பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் சில்லறை வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படுவதுடன், பொது மக்களுக்கும் ஆபத்தை உருவாக்கும் எனவும் தெரிவித்திருந்தார்கள்.
இந்த மனுவை நேற்றையதினம் விசாரித்த நீதிமன்றம் இணையம் மூலமாக மருந்து விற்பனை செய்வதற்கு எதிர்வரும்வரும் நவ.9ம் திகதி வரை இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும் இதுதொடர்பாக மத்திய, மாநில சுகாதாரத் துறைச் செயலாளர்கள், மத்திய, மாநில மருந்து தர கட்டுப்பாட்டாளர்கள் பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது