Home இந்தியாசிதம்பரத்தைக் காவலில் எடுக்க அமுலாக்கத் துறை நீதிமன்றத்தில் மனு தாக்கல்…

சிதம்பரத்தைக் காவலில் எடுக்க அமுலாக்கத் துறை நீதிமன்றத்தில் மனு தாக்கல்…

by admin

ஏர்செல் மக்சிஸ் வழக்கில் முன்னாள் இந்திய மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தைக் காவலில் எடுத்து விசாரிக்க அமுலாக்கத் துறை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது, நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் மற்றும் அவரின் மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் சட்டத்துக்குப் புறம்பாக, ஏர்செல் நிறுவனத்தில் 3.500 கோடி வெளிநாட்டு நிதிக்கு அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக சிபிஐயும் அமுலாக்கத் துறையும் தனித்தனியே வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகின்ற நிலையில் இருவரையும் கைது செய்ய இடைக்காலத் தடை விதித்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து இந்தத் தடையை ரத்து செய்ய கோரி, அமுலாக்கத் துறை சார்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவினை விசாரித்த நீதிமன்றம் அவர்களைக் கைது செய்வதற்கான தடையை நவம்பர் 1ஆம் திகதிவரை நீட்டித்து, வழக்கின் அடுத்த கட்ட விசாரணை அன்றைய தினமே நடைபெறும் எனத் தெரிவித்தார்.

இந்தநிலையில் இவ்வழக்கில் முன் பிணை கோரப்பட்ட சிதம்பரத்தின் மனு நேற்றையதினம் விசாரணைக்கு வந்த போது அதனை எதிர்த்து அமுலாக்கத் துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், சிதம்பரம் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்துத் தப்பித்து வருகிறார். அவரை, தங்களுடைய கட்டுப்பாட்டில், வைத்து விசாரிக்க அனுமதியளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

Spread the love
 
Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More