Home இந்தியா விவி மினரல்ஸ் நிறுவனம் இரண்டரை கோடி ரூபாய் கொடுத்ததாக வெளிவந்த தகவல் உண்மையில்லை

விவி மினரல்ஸ் நிறுவனம் இரண்டரை கோடி ரூபாய் கொடுத்ததாக வெளிவந்த தகவல் உண்மையில்லை

by admin


விவி மினரல்ஸ் நிறுவனம் தனக்கு இரண்டரை கோடி ரூபாய் கொடுத்ததாக வெளிவந்த  தகவல் உண்மையில்லை என தெரிவித்துள்ள  டிடிவி தினகரன், பொய் தகவலைப் பரப்பினால் சட்ட நடவடிக்கை மேற்கொள்வேன் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தின் முக்கியத் தொழிலதிபர்களில் ஒருவரான வைகுண்டராஜனுக்குச் சொந்தமான விவி மினரல்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான அலுவலகங்கள், வைகுண்டராஜன், அவரது மகன்களின் வீடுகள் போன்றவற்றில் கடந்த ஆறு நாட்களாக வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டிருந்தனர்.

இந்த சோதனை நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் விவி மினரல்ஸ் நிறுவனம் 800 கோடி ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும், சோதனையின்போது கணக்கில் வராத எட்டு கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதாகவும் வருமான வரித் துறையினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் வைகுண்டராஜன் மற்றும் தினகரன் நெருக்கம்தான் விவி மினரல்ஸ் நிறுவனத்தில் வருமான வரி சோதனை நடத்தப்படக் காரணம் எனவும் ஆர்கே நகர் இடைத் தேர்தல் சமயத்தில் விவி மினரல்ஸ் நிறுவனம், தினகரனுக்கு இரண்டரை கோடி ரூபாய் கொடுத்ததற்கான ஆவணங்கள் வருமான வரி சோதனையின்போது சிக்கியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள அமமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரன், விவி மினரல்ஸ் நிறுவனம் தனக்கு இரண்டரை கோடி ரூபாய் கொடுத்ததாக ஒரு தவறான தகவல் பரப்பப்படுகிறது. இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான தகவல் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இத்தகைய பொய்யான தகவலைப் பரப்புபவர்கள் நிறுத்திக்கொள்ளாவிட்டால், சட்டப்படி உரிய நடவடிக்கை எடுப்பேன் என தனது ட்விட்டர் பக்கத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More