சபாநாயகரின் அறிவிப்புக்கமைய தாம் இன்னும் அமைச்சர்களாகவே இருப்பதாகத் தெரிவித்து, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இன்று காவல்துறை தலைமையகத்துக்கு செல்லத் தீர்மானித்துள்ளனர். முன்னாள் அமைச்சர்களான தயா கமகே, நளின் பண்டார, பாலித தெவரப்பெரும உள்ளிட்டோரே இவ்வாறு காவல்துறை தலைமையகத்துக்குச் செல்லத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் தமக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கையை குறைத்தது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில், காவல்துறைமா அதிபரிடம் கேள்வி எழுவதற்கும் அவர்கள் தீர்மானித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கையை குறைத்தமையால் தமக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்படுமாயின் அதற்கான பொறுப்பை காவல்துறைமா அதிபரே பொறுப்பேற்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் தயா கமகே தெரிவித்துள்ளார்.