பஞ்சாப் நஷனல் வங்கியில் சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய், பண மோசடி செய்துவிட்டு வெளிநாடு தப்பி ஓடிய மும்பையை சேர்ந்த வைர வியாபாரியான நிரவ் மோடியின் 56 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. நிரவ் மோடியும் இவரும், இவரது உறவினர் மெ{ஹல் சோக்சியும், மும்பையில் உள்ள பஞ்சாப் நஷனல் வங்கிக் கிளையில் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று, அதை திரும்ப செலுத்தாமல் வெளிநாடு தப்பிச் சென்றதனையடுத்து இந்த வழக்கை, சி.பி.ஐ., மற்றும் அமுலாக்கதுறையினர் விசாரித்து வருகின்றனர்.
நிரவ் மோடியை விசாரணைக்கு நேரில் முன்னிலையாகுமாறு அமுலாக்க துறை பலமுறை அழைப்பாணை அனுப்பியும் அவர் முன்னிலையாகாத காரணத்தினால் அவரைக் கைது செய்ய, இன்டர்போல் எனப்படும் சர்வதேச காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், துபாயில் உள்ள நிரவ் மோடி மற்றும் அவரது குழு நிறுவனங்கள் என மொத்தம் 11 நிறுவனங்களின் 56.8 கோடி ரூபா மதிப்புள்ள சொத்துக்களை அமுலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது