198
இலங்கை நாடாளுமன்றம் எதிர்வரும் 14ஆம் திகதியன்று கூடும் முறை தொடர்பிலான அரசாங்கத்தின் இறுதித் தீர்மானம், இன்று (07.11.18) எடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன் பிரகாரம், அன்றைய தினம் சபை அமர்வை, மிக விமர்சையாக நடத்துவதா இல்லையா என்பது தொடர்பில், சபை முதல்வர் தினேஸ் குணவர்தனவினால், நாடாளுமன்றப் பொதுச் செயலாளருக்கு அறிவிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, அன்றைய அமர்வில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்வாரா, இல்லையா என்பது தொடர்பிலும், இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love