மத்திய வங்கி குண்டு வெடிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள, தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் மூவர் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
குறித்த குண்டுவெடிப்பில் 72 க்கும் மேற்பட்டோரை படுகொலை செய்தனர் என குற்றம் சுமத்தப்;பட்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், மூவரையும் கொழும்பு மேல்நீதிமன்றம் குற்றவாளிகளாக இனங்கண்டு கடந்த 2002 ஆம் ஆண்டு 200 வருடங்கள் தண்டனை வழங்கியிருந்தது.
தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள 200 வருடங்கள் சிறைத்தண்டனையை இரத்து செய்யுமாறு கோரியே மேற்படி மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த வழக்கு நேற்றையதினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படட போது மனுவினை பரிசீலனைக்கு எடுக்காமலே மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இந்த மேன்முறையீட்டு மனு தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்களான விக்கினேஸ்வரநாதன் பத்திரன், கதிராகுமனம் சிவகுமார் மற்றும் செல்வகுமார் நர்மதன் ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது