இலங்கையின் போலிப் பிரதமர் எனப்படும் மகிந்த ராஜபக்ஸவின் கூட்டம் ஒன்றில் தமிழ் முஸ்லீம் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் மஞ்சள் மற்றும் பச்சை நிறங்களை நீக்கிய சர்ச்சைக்குரிய கொடி பயன்படுத்தப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஹர்சடி சில்வா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மேடையில் அமர்ந்திருக்கையில் இந்தக் கொடியைப் பயன்படுத்தி இருப்பது வெட்கக் கேடானது என ஹர்சடி சில்வா தனது ருவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மீள் ருவீட் செய்துள்ள ஒருவர் இந்தக் கொடி கணிணியூடாக மாற்றப்பட்டு இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ள ஹார்சாடி சில்வா ரொயிட்டர் படத்தை ஆதாரமாக மீள் பதிவிட்டுள்ளார்.
இதேவேளை குறித்த கொடியினை சிங்கள கடும்போக்குவாதிகள் தமது நிகழ்வுகளில் வெளிப்படையாக பயன்படுத்தி வந்தனர். இதனையொட்டி கடந்த காலத்தில் பல்வேறு தரப்புக்களாலும் எதிர்ப்பு வெளியிடப்பட்டது. தமிழ், முஸ்லீம் மக்களின் அடையாளங்களை மறைத்து இலங்கயை சிங்கள நாடாகவும் சிங்களவர்களுக்குரிய நாடாகவும் அக்கொடி சித்திரிப்பதாக விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் குறித்த கொடியை இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி, இன்னாள் ஜனாதிபதியால் பிரதமராக நியமிக்கப்பட்ட சில தினங்களில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவரது ஆதரவாளர் பயன்படுத்தியுள்ளமை சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
1 comment
மகிந்தா பிரதமராக நியமிக்கப்பட்ட சில தினங்களில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் மஞ்சள் மற்றும் பச்சை நிறங்கள் அற்ற கொடியை பாவித்து இலங்கை ஒரு சிங்கள நாடு மற்றும் சிங்களவர்களுக்குரிய நாடு என்று காட்டி தமிழர்களின் சிவ பூமியாகிய இலங்கையில் பல்லின மக்கள் வாழ்கின்றார்கள் என்பதை மறைத்து ஒரு தவறான உணர்தலை வெளிப்படுத்த முயற்சித்துள்ளார்கள்.
Comments are closed.