கஜா புயல் காரணமாக அச்சுவேலி பத்தமேனி பகுதியில் இன்று (16) அதிகாலை அதிகளவான மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. இவ்வாறு முறிந்த மரங்களில் பெரிய பனை மரங்கள் மற்றும் வேம்பு மரம் மாமரங்கள் வாழைமரங்கள் என்பன அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளதுடன் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் சம்பவ இடங்களுக்கு சென்று சேத விபரங்களை கேட்டறிந்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
குறித்த புயலினால் ஏற்பட்ட மழைவீழ்ச்சியின் காரணமாக ஏற்பட்ட வெள்ளநீரை வழிந்தோடச் செய்யும் நடவடிக்கையையும் சில வீதிகளில் ஏற்பட்டிருந்த தடைகளும் பிரதேச சபையினால் அகற்றப்பட்டுள்து.
இதே வேளை நெடுந்தீவு பகுதிக்கு கஜா புயலினால் பாதிப்புகள் இல்லை அதிகாலை முதல் பலத்த காற்று வீசி வருகின்றமையாலும் கடல் சீற்றத்தில் காணப்படுவதாகவும் மீனவர்கள் அவதானமாக செயற்படுமாறும் மறு அறிவித்தல் வரும் வரை நெடுந்தீவு குறிகாட்டுவான் கடற்போக்குவரத்து இடம்பெறாது என நெடுந்தீவு பிரதேச சபை தவிசாளர் பிலிப் பற்றிக் றொஷான்தெரிவித்தார்.
அத்துடன் புங்குடுதீவு ஆலடிச்சந்தியின் பிரதான வீதியில் உள்ள ஆல மரம் புயல் காரணமாக முறிந்து வீதியை மூடியுள்ளது.அம்மரம் இதுவரை அகற்றப்படவில்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
பாறுக் ஷிஹான்