183
தற்போதுள்ள சிக்கலான சூழ்நிலைக்கு மத்தியில் இன்று திங்கட்கிழமை நான்காவது முறையாக பாராளுமன்றம் பகல் 1 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடவுள்ள நிலையில் இன்றைய அமர்வை பார்வையிடுவதற்கு பொது மக்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என பாராளுமன்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும் செய்தி சேகரிப்பதற்கான அனுமதி ஊடகங்களுக்கு வழங்கப்படும் எனவும் பாராளுமன்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெறும் போது, பார்வையாளர்கள் மற்றும் வெளிநாட்டு இராஜதந்திரிகள் பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்திருந்து பாராளுமன்ற நிலைமைகளை அவதானித்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love