புதுச்சேரி காலாப்பட்டு கடல் பகுதியில் மர்மப்பொருள் ஒன்று நேற்று கரை ஒதுங்கியநிலையில் அதனை இன்று தேங்காய்த்திட்டு துறைமுகத்துக்கு எடுத்து சென்று ஆய்வு செய்ய உள்ளதாக துறைமுகத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடலுக்குள் இருந்த ஐந்து கிலோமீட்டர் தொலைவில் காணப்பட்ட உருளை வடிவிலான இந்த மர்மப்பொருளை அவதானித்த மீனவர்கள் அதனை கயிற்றால் கட்டி கரைக்கு இழுத்து வந்தனர்.
அத்துடன் இது தொடர்பில் இ காவல் நிலையத்துக்கு மீனவர்கள் தகவல் வழங்கியதனையடுத்து அப்பகுதிக்கு வந்த துறைமுகத்துறை அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் கடலோர காவல் படையினர் மர்ம பொருளை சோதனை செய்தனர்.
பின்னர் அந்த மர்ம பொருள் கஜா புயலின் காரணத்தால் அடித்து வரப்பட்டதாக இருக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளனர். இப்பொருளானது நீர்வழிப் பாதைகள் பயன்படுத்தும் பொருளாக இருக்கலாம் எனவும் அதனை தேங்காய்த்திட்டு துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு ஆய்வு செய்ய உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.