வியட்நாமில் கடந்த சில வாரமாக பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமை நகரமான நா தாராங் நகரில் உள்ள கிராமங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியே இவ்வாறு 13 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலரைக் காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளர்.
மேலும் ஆபத்தான பகுதிகளில் நிலச்சரிவில் சிக்கிக்கொண்ட மக்களை மீட்கும் பணிகளில் 600க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர எனவும் விரைவில் மீட்புப் பணி முடிவடைந்து இயல்பு நிலை திரும்பும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெள்ளம் மற்றும் புயல் காரணமாக் ஏற்படும் நிலச்சரிவில் சிக்கி வியட்நாமில் ஒவ்வொரு ஆண்டும் 100க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது