170
அரசாங்கத்தின் இடைக்கால வரவுசெலவுத் திட்டம் அடுத்த வாரம் சமர்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார். எனினும் எந்த தினத்தில் வரவுசெலவுத் திட்டம் சமர்பிக்கப்படும் என்பதை பிரதமர் மகிந்த ராஜபசக்சவே தீர்மானிப்பார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்க அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை வசந்த சேனநாயக்கா போல மேலும் பலர் அரசாங்கத்தில் வந்து இணைவார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் இச் சந்திப்பின்போது அமைச்சர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
Spread the love