பிரதான செய்திகள் விளையாட்டு

மகளிர் உலக கிண்ண இருபதுக்கு 20 – இறுதிப் போட்டிக்கு அவுஸ்திரேலியா – இங்கிலாந்து


மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் 6வது உலக கிண்ண மகளிர் 20 ஓவர் போட்டியின் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணி இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. அரைஇறுதி போட்டிக்கு நடப்பு சம்பியனான மேற்கிந்திய தீவுகள் , இந்தியா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் தகுதி பெற்ற நிலையில் முதலாவது அரையிறுதிப் போட்டியில், 71 ஓட்;ட வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி அவுஸ்திரேலிய ணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

இதனையடுத்து இன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், இந்தியா – இங்கிலாந்து அணிகள் போட்டியிட்ட நிலையில் நாணயச்சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 19.3 ஓவர்களில் 112 ஓட்டங்களை எடுத்திருந்தது.  இதையடுத்து 113 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது

இதனையடுத்து ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாமற்றும் இங்கிலாந்து அணிகள் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.