கடும் மழை காரணமாக பல பிரதேசங்களில் மண்சரிவுகள் இடம்பெறக் கூடிய ஆபத்துக்கள் காணப்படுவதாக கட்டிட ஆராய்ச்சி நிலையத்தின் மண்சரிவு பிரிவுக்கான பதில் பணிப்பாளர் கலாநிதி காமினி ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி மாவட்டத்தில் குருவிட்ட, எஹலியகொட, பிரதேச செயலகப் பிரிவுகளிலும், களுத்துறைமாவட்டத்தில் புளத்சிங்கள, இங்கிரிய பிரதேச செயலகப் பிரிவுகளிலும், கேகாலை மாவட்டத்தில்யட்டியாந்தோட்டை, தெரணியகல, தெஹியோவிற்ற ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலும், கொழும்பு மாவட்டத்தில் சீதாவாக்க, பாதுக்க ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலும் மண்சரிவு ஏற்படும் ஆபத்துக் காணப்படுகிறது.
இது குறித்து மக்களை அவதானத்துடன் இருக்குமாறும், மண்சரிவு ஆபத்துள்ள இடங்களை விட்டு வெளியேறி பாதுகாப்பு இடங்களுக்கு சென்று தங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, ராஜாங்கனை தெருறுஓயா மற்றும் தம்போவ நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன எனவும் இந்த பிரதேசத்தில் அதிக மழை வீழ்ச்சி இடம்பெற்றமையே இதற்கான காரணமாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
தெதுறுஒயா நீர்த்தேக்கத்தின் 4 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன எனவும் இந்தப் பிரதேசத்தில் தாழ் நிலப்பகுதியில் குடியிருப்போர் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென்று நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது