Home இந்தியா தி வயர் இணைய இதழ் மீது அனில் அம்பானி நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தார்…

தி வயர் இணைய இதழ் மீது அனில் அம்பானி நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தார்…

by admin


ரபேல் ஊழலில் அனில் அம்பானியைத் தொடர்புபடுத்தி அவதூறான செய்திகள் வெளியிட்டதாகக் தெரிவித்து தி வயர் என்னும் இணைய இதழ் மீது 6,000 கோடி ரூபாய் நஸ்டஈடு கோரி அம்பானியின் நிறுவனம்  நேற்று அகமதாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

தி வயர் இணைய இதழ் கடந்த ஓகஸ்ட் 23ஆம் திகதி ரபேல் ஊழல்: இந்தச் சர்ச்சையை எப்படி புரிந்து கொள்வது? என்ற தலைப்பில் வீடியோ விவாதம் ஒன்றை நடத்தி அதை வெளியிட்டிருந்தது.  அந்த விவாதத்தில் பாதுகாப்புத் துறை தொடர்பாக எழுதிவரும் பத்திரிகையாளர் அஜய் சுக்லா என்பவரும், தேசிய பாதுகாப்பு ஆய்வாளர் ஹேப்பிமேன் ஜேக்கப்பும் தி வயரின் சார்பாக எம்.கே.வேணுவும் கலந்து கொண்டனர்.

அந்த விவாதத்தில், கடைசி நேரத்தில் ரிலையன்ஸ் கம்பெனியின் வரலாறு தெரியாமல் எப்படி ஒப்பந்தத்தில் எடுத்து்க் கொள்ளப்பட்டது எனவும் அந்தப் பேரத்தில் வெளிப்படைத்தன்மை இருந்ததா என்பது குறித்தும் விவாதம் நடத்தப்பட்டது.  இந்த விவாதம் அவதூறான செய்திகளைக் கூறியுள்ளது எனவும் தனது கம்பெனியான ரிலையன்ஸின் பெருமையையும் கௌரவத்தையும் குலைத்து விட்டது எனவும் தெரிவித்தே அனில் அம்பானி நஷ்டஈடாக 6,000 கோடி ரூபாய் கோரி வழக்கு தொடர்ந்துள்ளர். இந்த வழக்கின் விசாரணையானது நேற்று அகமதாபாத்தில் நீதிமன்றத்தில் ஆரம்பமாகியுள்ளது.

இது தொடர்பாக தி வயரின் ஆசிரியர் சித்தார்த் வரதராஜன் கூறுகையில், ஊடகத்தை அச்சுறுத்தி மௌனமாக்கிட இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது எனவும் இதுபோன்ற தந்திரங்களினால் நாங்கள் பின்வாங்க மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளார்.

தி வயர் இதழின் மீது ஏற்கனவே அதானி குழுமம் 300 கோடி ரூபாய் மதிப்புள்ள மூன்று கிரிமினல் வழக்குகளையும் மூன்று சிவில் வழக்குகளையும் தொடர்ந்துள்ளது.
பாஜக தலைவர் அமித் ஷாவின் மகனின் மூலம் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. பாஜக எம்.பி ராஜீவ் சந்திரசேகரினால் 40 கோடி ரூபாய் மதிப்புள்ள சிவில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ரவி சங்கரினால் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள சிவில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More