இரண்டு பிரிவினரும் அதிகாரங்களை பகிர்ந்து இடைக்கால அரசாங்கம் அமைத்து பிரச்சினைக்கு தீர்வு கண்டபின்னர் பொதுத் தேர்தலுக்கு செல்லவேண்டும் என ஜாதிக ஹெல உறுமய பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்தன தேரர் தெரிவித்துள்ளார். இன்றையதினம் பாராளுமன்றத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியில் ஒருவரையொருவர் மாறி மாறி ஜனாதிபதியை விமர்சிப்பதன் மூலம் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது எனத் தெரிவித்த அவர் ஐக்கிய தேசிய கட்சிக்கு பெரும்பான்மை இருப்பது ஜனாதிபதிக்கு விருப்பம் இல்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதனால் இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைத்து விட்டு 6 மாதங்களுக்கு பின்னர் இரண்டு பிரிவுகளுக்கும் அதிகாரங்களை வழங்கி பொதுத்தேர்தலுக்கு செல்லவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.