288
இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா மாகாணத்தில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் ஓய்வு விடுதி ஒன்று மண்ணில் புதைந்ததில் விடுதியில் தங்கியிருந்த 7 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்தனர். கல்விச் சுற்றுலாவுக்காக பல்கலைக்கழகத்தில் பயிலும் 14 மாணவர்கள் வடக்கு சுமத்ரா மாகாணத்துக்கு சென்றிருந்த நிலையில் காரோ மாவட்டத்திலுள்ள ஒரு விடுதியில் அனைவரும் தங்கி இருந்த போதே இவ்வாறு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது
தகவல் அறிந்து சென்ற தேசிய பேரிடர் மீட்பு படையினர் காயங்களுடன் 7 பேரை காப்பாற்றிய அதேவேளை இடிபாடுகளுக்குள் சிக்கி, மூச்சுத்திணறி உயிரிழந்த 7 மாணவர்களின் உடல்களையும் மீட்டுள்ளனர்
Spread the love