தெற்கு ஸ்பெயினில் இடம்பெற்ற பிராந்திய தேர்தல்களில் தீவிர வலதுசாரிகளின் வோக்ஸ் கட்சி முதன் முறையாக சில வெற்றிகளைப் வெற்றிபெற்றுள்ளது. 1975-ல் நாட்டின் ராணுவ ஆட்சி முடிவடைந்த பின்னர் இவ்வாறு முதன் முறையாக சில வெற்றிகளைப் வெற்றிபெற்றுள்ளது.
புலம்பெயர்ந்தோர் , கட்டலோனிய பிரிவினைவாதம் உள்பட பல விடயங்களில் கடுமையான போக்குடைய இந்தக் கட்சி ஆண்டலூசியா இம்முறை தேர்தலில் 12 இடங்களை வென்றுள்ள இக்கட்சி பிராந்தியத்தில் எதிர்கால கூட்டணியை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் நிலை உருவாகியுள்ளது.
ஆளும் சோஷலிஸ்ட் கட்சி அதிக இடங்களாக 33 இடங்களை வென்றிருந்தாலும், இக்கட்சி பெற்றிருந்த பெரும்பான்மையில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
ஸ்பெயின் அரசியலில் வோக்ஸ் கட்சியின் வெற்றியானது ஐரோப்பா முழுவதும் அண்மைக்காலங்களில் ஏற்பட்டுவரும் தேசியவாத எழுச்சியின் தொடர்ச்சியாகும் எனச்சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
ஸ்பெயினின் மக்கள் தொகை மிகுந்த ஆண்டலூசியாவின் தெற்கு பகுதி, மத்தியத் தரைகடலைக் கடந்து ஸ்பெயினுக்குள் புலம்பெயர்ந்தோர் நுழையும் முக்கிய இடமாக விளங்குகின்ற நிலையில் அங்கு வேலையில்லா திண்டாட்டம் முக்கிய பிரச்சினையாக உள்ளது.
இதேவேளை பிராந்திய தேர்தலின் முடிவானது ஸ்பெயினின் புதிய பிரதமர் பெட்ரோ சான்செஸ்ஸை பாதிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. சோஷலிச கட்சியின் தோல்வியும் அரசின் பலவீனமும் புதிய பிரதமரை முன் கூட்டி தேர்தல் நடத்தும் முடிவை எடுக்க அழுத்தம் வழங்கலாம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது