Home பிரதான செய்திகள்பலன் டி ஆர் விருதை லூக்கா மோட்ரிச் வென்றுள்ளார்

பலன் டி ஆர் விருதை லூக்கா மோட்ரிச் வென்றுள்ளார்

by admin


பலன் டி ஆர் (Ballon d’Or) விருதை குரோசிய அணியின் நட்சத்திர கால் பந்து வீரர்  லூக்கா  மோட்ரிச்  (luka modric) வென்றுள்ளார். பிரான்சில் இருந்து வெளிவரும் பிரான்ஸ் கால்பந்து இதழ் சார்பில் ஆண்டுதோறும் பலன் டி ஆர் விருது வழங்கப்பட்டு வருகிறது.  உலகம் முழுவதும் உள்ள 180 பத்திரிகையாளர்கள் வாக்களித்து இந்த விருதுக்கான வீரர் தெரிவு செய்யப்படுகின்றார். இந்த ஆண்டு விருதுக்கான தேர்வு பட்டியலில் போர்த்துக்கல்லின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, அர்ஜென்டினாவின் லயனல் மெஸ்ஸி, குரோசியாவின் லூக்கா மோட்ரிச், பிரான்சின் கிளி யான் பாப்பே உள்ளிட்ட 30 பேர் இடம் பெற்றிருந்தனர்.

அந்தவகையில்   நேற்று அதிகாலை விருது வழங்கும் விழா பாரிஸ் நகரில் நடைபெற்றது. இதில் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் குரோசிய அணியை இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்ற அந்த அணியின் நடுகள வீரரான லூக்கா மோட்ரிச் விருதை தட்டிச் சென்றார். தொழில்முறை கால் பந்து போட்டியில் ரியல்மாட்ரிட் அணியிலும் மோட்ரிச் முக்கியமான வீரராக திகழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More