கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தி காணாமலாக்கப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள நேவி சம்பத் என்ற கடற்படையின் முன்னாள் லெப்டினன்ட் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி எதிர்வரும் 19 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 11 இளைஞர்களைக் கடத்திய சந்தேகநபர்கள் ”அண்ணாச்சி” எனப்படும் பாதாளக்குழு உறுப்பினர் என கூறி அவர்களின் உறவினர்களிடம் கப்பம் கோரி தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுத்ததாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் ஏற்கனவே நீதிமன்றத்தில் அறிவித்திருந்தது.
11 இளைஞர்கள் கடத்தல் – நேவி சம்பத்தின் விளக்க மறியல் நீடிப்பு…
228
Spread the love