253
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி இரணைமடுகுளத்தின் ஐந்து வான்கதவுகள் இன்று(08) திறக்கப்பட்டுள்ளன. குளத்திற்கான நீர் வரவு அதிகரித்துள்ளமையால் நீர் மட்டம் 36.5 அடியாக உயர்ந்துள்ள நிலையில் இன்று காலை 11 மணியளவில் 14 வான்கதவுகளில் ஐந்து கதவுகள் 150 மில்லிமீற்றர் அளவில் திறக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களில் அதிகளவு மழைவீழ்ச்சி கிடைக்கபெறும் என எதிர்பார்க்கின்றமையால் முன்னெச்சரிக்கையாக ஐந்து வான்கதவுகளும் திறந்துவிடப்பட்டுள்ளன.
அத்தோடு வான் கதவுகள் திறந்து விடப்பட்டமையால் தாழ்நிலபகுதியில் எவ்வித பாரியளவிலான பாதிப்புக்களும் ஏற்படாது எனவும், தாம் தொடர்ந்தும் கண்காணிப்பில் உள்ளதாகவும் தெரிவித்துள்ள நீர்ப்பாசனத்திணைக்களம் எனினும் மக்களை எச்சரிக்கையாக இருக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளது
Spread the love