ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கும் எதிராக மேற்குலக நாடுகள் செயற்படுவதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ குற்றம் சுமத்தியுள்ளார். மொரட்டுவையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி தனக்குள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தியே புதிய பிரதமரையும், அரசையும் நியமித்ததாகவும் எனினும் அதற்கு எதிராக மேற்குல நாடுகளின் தூதுவர்கள் செயற்படுவதாகவும் தமக்கு தேவையான ஜனாதிபதி, பிரதமரை நியமிக்கவே அவர்கள் முற்படுவதாகவும் கோத்தாபய குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும் 2014 ஆம் ஆண்டு தலைதூக்கிய சக்திகள் மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளதாகவும் அன்றுபோல் இன்றும் போலிப்பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அரசமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டம் முன்வைக்கப்பட்ட போது அதை பாராளுமன்ற உறுப்பினர்கள் முழுமையாக வாசிக்கவில்லை எனவும் அவ்வாறு வாசித்திருந்தால் அப்படியானதொரு சட்டமூலத்துக்கு தெரிவித்துள்ளார்.