இலங்கை பிரதான செய்திகள்

தாய் மீதான குற்றச்சாட்டுக்கு நாமல் மறுப்பு

காவல்துறை அதிகாரிகளின் இடமாற்றம் தொடர்பில் ஷிராந்தி ராஜபக்ஸ   உத்தரவிட்டதாக சமூகவலைத்தளங்களில் வெளிவரும் செய்திகளில் எவ்வித உண்மையுமில்லையென நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தனது டுவிட்டர் வலைத்தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

கடந்த 5ஆம் திகதி வீடொன்றிலிருந்து 5 நாட்கள் உணவு வழங்கப்படாமல் கட்டிவைக்கப்பட்டிருந்த நாயொன்று பெண்ணொருவரால் காவல்துறையினரின் ஒத்துழைப்புடன் மீட்கப்பட்டதாகவும் இதனையடுத்து குறித்த வீட்டின் உரிமையாளர் சார்பில் முன்வந்த ஷிராந்தி அன்று மாலையே நாயை மீட்டெடுத்த காவல்துறையினரினர் இடமாற்றம் தொடர்பில் நடவடிக்கை எடுத்தாரெனவும் சர்மினி சேரசிங்க என்ற பெண் டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.

இதனையடுத்தே சமூக வலைத்தளங்களில் ஷிராந்தி குறித்து அவதூறுகள் பரப்பப்படுவதாகவும், அதில் எவ்வித உண்மையுமில்லையெனவும் பதிவிட்டுள்ள நாமல் தனது தாய் மிருகங்கள் மீது மிகுந்த இரக்கமுடையவரெனவும் பதிவிட்டுள்ளார்.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link