178
அல்ஜீரியாவில் உள்நாட்டுப் போரில் கொல்லப்பட்ட 19 கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கு, கத்தோலிக்க திருச்சபையால் அருளாளர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இது கிறிஸ்தவ மதத்தில் புனிதர் பட்டம் வழங்குவதற்கு முந்தைய நிலையாகும். இஸ்லாமிய நாடான அல்ஜீரியாவில் இவ்வாறு நிகழ்வது இதுவே முதல் முறையாகும்.
அருளாளர் பட்டம் பெற்றவர்களில் பெரும்பாலானோர் பிரான்ஸ் நாட்டவர்கள் ஆவர்.1991 முதல் 2002 வரை, இஸ்லாமியவாதிகள் மற்றும் அரசுக்கு இடையே நடந்த அல்ஜீரிய உள்நாட்டுப் போரில் இரண்டு லட்சம் பேர் வரை கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love